சிங்கப்பூருக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப திறமைகளை ஈர்க்க உதவும் புதிய வேலை அனுமதி – பிரதமர் லீ

(PHOTO: TODAY)

சிங்கப்பூருக்கு மேலும் அதிக தொழில்நுட்ப திறைமையாளர்கள் தேவை, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலை அனுமதி, மிகவும் திறமையான நபர்களை ஈர்க்க உதவும் என்று பிரதமர் லீ சியென் லூங் நேற்று (நவம்பர் 17) இரவு தெரிவித்தார்.

சிங்கப்பூர் தொழில்நுட்ப கருத்தரங்கு 2020இல் ஒரு முக்கிய உரையை நிகழ்த்திய திரு லீ, பொருளாதார வளர்ச்சி கழகத்தால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட டெக்.பாஸ் (Tech.Pass) குறித்து பேசினார்.

சிங்கப்பூரில் சுமார் S$410,000 மதிப்புள்ள போதைபொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!

நிறுவனர், முதலீட்டாளர், பணியாளர், ஆலோசகர் மற்றும் கல்வியாளர் என ஒரே நேரத்தில் வெவ்வேறு பதவி வகிக்கும் நபர்கள் அவர்கள் என அவர் விவரித்தார்.

மேலும், இந்த சுற்றுச்சூழல் அமைப்பின் பல பகுதிகளுக்கு மூலதனம், நெட்வொர்க்குகள் மற்றும் அறிவு சார்ந்தும் பங்களிக்க முடியும், என்றார் .

இது குறிப்பிட்ட வேலை அல்லது முதலாளியுடன் பிணைக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அனுமதி போலன்றி, இந்த புதிய வேலை அனுமதி தனிப்பட்டதாக இருக்கும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

அதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 2021 முதல் தொடங்கும், அப்போது 500 அனுமதி பாஸ்கள் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மக்களை கவனிக்க வைக்கும் என்றும், மேலும் சிங்கப்பூருக்கு திறமைகளை ஈர்க்க உதவும் என்றும் பிரதமர் கூறினார்.

இந்தியா-சிங்கப்பூர் விமானங்களின் குளிர்கால அட்டவணை: ஏர் இந்தியா.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…