சிங்கப்பூர் விமான போக்குவரத்துத் துறைக்கு கூடுதலாக S$84 மில்லியன் உதவி!

(Photo: Reuters)

ஊழியர்கள் மற்றும் அதன் வர்த்தகங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில், விமானத் துறைக்கு கூடுதலாக S$84 மில்லியன் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்துள்ளது.

கொரோனா கிருமித்தொற்றின் காரணமாக ஏற்பட்ட தாக்கத்தை சமாளிக்க இந்த நிதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

நடைபாதையில் திடீரென பாய்ந்த கார்…பாதசாரி இருவரை தாக்கியது – ஓட்டுநர் கைது

பிப்ரவரியில் S$112 மில்லியன் விமானத்துறை உதவித் திட்டமும், ஆகஸ்ட் மாதம் S$187 மில்லியன் விமான உதவித் திட்டமும் முன்னர் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

COVID-19 தொற்றுநோயால் விமானத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று CAAS கூறியுள்ளது, கடந்த நவம்பரில் சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் போக்குவரத்து சேவை எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் 98 சதவீதம் சரிவைக் கண்டது.

விமான சேவை உடனே வளர்ச்சி காணாது. எனவே, விமான நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் நெருக்கடியைக் சமாளிக்க விமானத் துறைக்கு ஆதரவைப் பேணுவது மிகவும் முக்கியம் என்று CAAS கூறியுள்ளது.

பொது சுகாதார ஆபத்தைக் குறைக்கும் அதே வேளையில் விமான நிறுவனங்கள், தங்கள் விமானப் பயணத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு கூடுதல் உள்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனித சக்தி தேவை என்றும் அது கூறியுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போடும் பணி தொடங்கியது…!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…