சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை.!

Singapore celebrate eid prayer

சிங்கப்பூரில் இன்று (20-07-2021) காலை புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. பள்ளிவாசல்களில் இன்று காலையில் COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கூட்டுத்தொழுகைகள் நடைபெற்றது.

சிங்கப்பூரில் உள்ள 19 பள்ளிவாசல்களில் ஒவ்வொன்றிலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தொழுகை நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

சமூக அளவில் அதிகரிக்கும் கிருமித்தொற்று: பள்ளிகள் கூடுதல் கட்டுப்பாடுகள்.!

ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற பள்ளிவாசல்களில் ஒவ்வொரு நபராக சோதனையிட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சமூக இடைவெளி வீட்டு அனைவரும் அமர்ந்திருந்தார்கள் என்றும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்துவிட்டு தொழுகையை நிறைவேற்றினோம் என்றும் குயீன்ஸ்வேயில் உள்ள முஜாஹிதீன் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் பங்கேற்ற திரு. நசீர் அகமது என்பவர் செய்தியிடம் கூறினார்.

சிங்கப்பூரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின்போது, தேசியப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு, MUIS எனப்படும் இஸ்லாமிய சமய மன்றம் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் 13 வயது சிறுவன் மரணம் – 16 வயது மாணவர் மீது கொலை குற்றச்சாட்டு