சிங்கப்பூரில் உணவுப்பொருட்களில் போதைப்பொருள் கலப்பு; 4 பேர் கைது.!

Singapore cnb arrest offenders
Pic: Central Narcotics Bureau

சிங்கப்பூரில் போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தில், வெளிநாட்டவர் உட்பட நான்கு பேரை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சிக்லாப் வாக் (Siglap Walk) அருகிலுள்ள குடியிருப்பு வீட்டில் நேற்று முன்தினம் (ஜூன் 22) போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள்
மேற்கொண்ட சோதனையின்போது அவர்கள் பிடிபட்டனர்.

டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய நபருக்கு இரண்டு வார சிறைத்தண்டனை!

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, சுமார் 3,159 கிராம் கஞ்சா, 14 கிராம் ஐஸ் போதைபொருள், 9 கிராம் கொக்கேய்ன் (cocaine), 79 எக்ஸ்டசி (Ecstasy) மாத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கஞ்சா கலந்ததாக நம்பப்படும் 51 ரொட்டி வகை உணவுகள், வெண்ணெய் மற்றும் 4,100 வெள்ளி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதை பொருள்களின் மதிப்பு 57,000 வெள்ளிக்கும் அதிகம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில், 3 பேர் ஆடவர்கள் மற்றும் ஒருவர் பெண் அடங்குவர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கொரோனா அதிகமுள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தும் காலம் குறைப்பு.!