கொரோனா அதிகமுள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தும் காலம் குறைப்பு.!

Pic: Joshua Lee/Mothership

கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்புவோர்களுக்கான வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு காலம் குறைக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் திரும்புவோர்கள் 21 நாட்கள் வீட்டில் கட்டாயம் தங்கும் உத்தரவு இருந்த நிலையில், தற்போது 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

புதியவகை கிருமித்தொற்று பரவல் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கியது. அப்போது அது குறித்த தகவல்கள் குறைவாகவே இருந்தன என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு 21 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய அம்சங்களுடன் கூடிய எஸ்.பி.எஸ். போக்குவரத்து செயலி!

புதியவகை கிருமித்தொற்று வேகமாக பரவும் என்றும், இருப்பினும் அது நோயாக மாறுவதற்குரிய காலம் வழக்கமானதை விட அதிகமாக இருக்கும் என்பதற்குச் சான்றுகள் இல்லை என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

வீட்டில் 14 நாட்கள் கட்டாயம் தங்கும் உத்தரவு இன்று (24-06-2021) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இருப்பினும், அவர்கள் PCR முறை சோதனையைத் தாண்டி, மூன்றாம், ஏழாம், பதினோராம் நாட்களில் Antigen Rapid பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் வெளிநாட்டினர் விவகாரம்: அமைச்சர் சண்முகம் விடுத்த சவாலை ஏற்ற ‘பி.எஸ்.பி’!