சிங்கப்பூரில் கிட்டத்தட்ட S$2 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்!

Singapore CNB seizes drugs
(Photo: Nuria Ling/TODAY)

சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) கிட்டத்தட்ட S$2 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளது.

இதில் 14 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருப்பது இது முதன்முறை என்று CNB இன்று (நவம்பர் 13) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றிலிருந்து 58,000-க்கும் மேற்பட்டோர் முழுமையாக குணம்.

இதில் மொத்தம் 14,151 கிராம் ஹெராயின், 2,853 கிராம் ஐஸ் மற்றும் 7,553 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றும் CNB தெரிவித்துள்ளது.

அதனுடன் மேலும் S$12,629 ரொக்கமும் அடங்கும். இதில் 29 முதல் 55 வயதுக்குட்பட்ட ஐந்து பேர், அதாவது மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

CNB கடைசியாக 2001ல் பெரிய அளவில், அதாவது சுமார் 14.9 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றியது. அதன் பிறகு பெரிய அளவு என்றால் தற்போது கைப்பற்றியது தான்.

மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் புழங்கிகளுக்கும் எதிரான வழக்கமான, தொடர்ச்சியான நடவடிக்கைகள் தொடரும் என்று CNB தெரிவித்துள்ளது.

மியான்மர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகிக்கு பிரதமர் லீ வாழ்த்து.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…