சிங்கப்பூரில் கிருமித்தொற்றிலிருந்து 58,000-க்கும் மேற்பட்டோர் முழுமையாக குணம்!

Singapore COVID-19 Updates MOH
Singapore COVID-19 Updates- MOH

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 12 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 58,002 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மியான்மர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகிக்கு பிரதமர் லீ வாழ்த்து.

மருத்துவமனையில்..

மேலும், 48 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது உடல்நலம் தேறியும் வருகின்றனர். மேலும் யாரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை என்றும் MOH தெரிவித்துள்ளது.

சமூக வசதிகளில்..

மேலும், 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

கிருமித்தொற்று பாதிப்பு

நேற்றைய நிலவரப்படி, வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த 11 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி 58,102 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி

மேலும் சமூக அளவில் யாருக்கும் பாதிப்பில்லை, அதே போல வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் யாரும் பாதிக்கப்படவில்லை.

இறப்பு

சிங்கப்பூரில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 28ஆக உள்ளது.

விமான டிக்கெட்டுகளுக்கான தேவையில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்காது – நிபுணர்கள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…