சிங்கப்பூரில் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

Photo: TN Govt

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 24) காலை 10.00 மணிக்கு சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்க் (Sembcorp) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிம்யின் வாங்க், கேப்பிட்டா லேண்ட் (Capita Land) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சீவ் தாஸ்குப்தா, டெமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா ஆகியோரைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Photo: CM MKStalin

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ அங்காளம்மன் திருவிழா!

அத்துடன், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார்.

சிங்கப்பூருக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

இந்த கூட்டத்தில், தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப., சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.