இந்தோனேசிய தேவாலயத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – சிங்கப்பூர் கண்டனம்!

Singapore condemns bombing at Indonesia church
Photo: REUTERS

இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்தின் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலை சிங்கப்பூர் கண்டித்துள்ளது.

மேலும், இதுபோன்ற வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மன அழுத்தம் மற்றும் தனிமையில் வாடும் வெளிநாட்டு ஊழியர்கள் – வெளியே செல்ல எப்போது அனுமதி?

அப்பாவி பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறை தாக்குதல்கள் எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் (MFA) திங்களன்று (மார்ச் 29) தெரிவித்தார்.

சுலவேசி (Sulawesi) தீவின் மக்காசர் நகரில் உள்ள தேவாலயத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் எந்தவொரு சிங்கப்பூரரும் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்று MFA செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

முகக்கவசத்தை அகற்றி காவல்துறை அதிகாரி மீது வேண்டுமென்றே இருமிய ஆடவருக்கு 14 வார சிறை!