சிங்கப்பூரில் மேலும் 2 COVID-19 தொற்று பாதித்த நபர்கள் உறுதி – MOH

Singapore confirms 2 COVID-19 cases
Singapore confirms 2 COVID-19 cases linked to new Science Park cluster; 3 more discharged (Image: Google Street View)

சிங்கப்பூரில் இரண்டு புதிய COVID-19 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) தெரிவித்துள்ளது.

இரண்டு புதிய சம்பவங்களும், 10 சைன்ஸ் பார்க் ரோட்டில் அமைந்துள்ள ‘விஸ்லேர்ன் டெக்னாலஜிஸ்’ என்ற நிறுவனத்தோடு தொடர்புடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் முறையான அனுமதி இல்லாமல் கொத்தமல்லி இறக்குமதி செய்தவருக்கு அபராதம்..!

இதன் மூலம் சிங்கப்பூரில் தொற்று உறுதிசெய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது. மேலும் மூன்று நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், 69 நபர்கள் இந்த தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர். மேலும் இருபத்தொன்பது COVID-19 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஏழு பேர் ஐ.சி.யுவில் உள்ளனர் என்று CNA குறிப்பிட்டுள்ளது.

புதிய உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள்

சம்பவம் 97-இல் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 44 வயதான பெண் சிங்கப்பூர் நிரந்தரவாசி. இவர் சீனாவுக்கோ அல்லது தென் கொரியாவின் Daegu மற்றும் Cheongdo ஆகிய பகுதிகளுக்கோ சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை.

அவர் தற்போது தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சம்பவம் 93 மற்றும் 95 உடன் தொடர்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மாணவிக்கு தொல்லை; சிங்கப்பூரில் பணிபுரிந்தவரை மாஸ்டர் பிளான் போட்டு கைது செய்த போலீஸ்..!

சம்பவம் 98-இல் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 24 வயதான ஆண் சிங்கப்பூர் நிரந்தரவாசி.

இவரும் சீனாவுக்கோ அல்லது தென் கொரியாவின் Daegu மற்றும் Cheongdo ஆகிய பகுதிகளுக்கோ சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை.