“எங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தான் முக்கியம்…” – சிக்கிய கட்டுமான நிறுவனம்

workplace injury compensation-limits update mom
(Photo by Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரின் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிய கட்டுமான நிறுவனம் ஒன்று பிடிபட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஊழியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, இந்த குறைபாடுகளுக்காக EC Builders என்ற நிறுவனத்துக்கு S$170,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று (ஜனவரி 4) தெரிவித்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட வேலையிட விபத்தில் வெளிநாட்டு ஊழியருக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் கீழ் நிறுவனத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர்-திருச்சி வந்த ஊழியர்கள்… RT-PCR இருந்தும் பிடிபட்டனர் – “இண்டிகோ, ஸ்கூட்” விமானங்களுக்கு கடும் எச்சரிக்கை

என்ன நடந்தது?

ஆகஸ்ட் 1, 2019 அன்று, EC Builders நிறுவனத்தில் பணிபுரிந்த கட்டுமான ஊழியரான அலி முகமது சோஹாக் என்ற அவர் வேலையிடத்தில் லைஃப்லைன்களை ஆய்வு செய்ய பணியில் அமர்த்தப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

அவருக்கான பணி, ​​ஃபார்ம்வொர்க் கட்டமைப்பில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளின் மேல் நடக்கவேண்டும், அது சுமார் 12 மீ உயரம் கொண்டது.

இதனை அடுத்து அங்கிருந்து அவர் தவறி கீழே விழுந்தார். அதன் பின்னர் அவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தவறி கீழே விழுந்த ஊழியருக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டது.

முறையான பயிற்சி இல்லாமல் அவருக்கு அந்த நடை பணி கொடுக்கப்பட்டதாக MOM கூறியுள்ளது.

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவர்… உயிர்வாழ போராடும் பிள்ளை, “ஒரு ஊசி ரூ.18 கோடி” – உதவிக்கு ஆளில்லாமல் கலங்கி நிற்கும் குடும்பம்