சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்!

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்!
Photo: Singapore in India

 

பொங்கல் பண்டிகை, தமிழ்நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், சிங்கப்பூரிலும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் 9வது வருட வருடாபிஷேகப் பெருவிழா-2024!’

அந்த வகையில், சென்னையில் உள்ள சிங்கப்பூரின் துணை தூதரகத்தில் துணை தூதர் எட்கர் பாங் தலைமையில் பொங்கல் பண்டிகையை தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். குறிப்பாக, தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் வகையில் தூதரக அதிகாரிகள் வேட்டி, சட்டை அணிந்தும், விறகு அடுப்பில் பொங்கல் வைத்தும் கொண்டாடினர்.

‘பொங்கல் பண்டிகை 2024’- பொதுமக்களுக்கான பொங்கல் விநியோகம் குறித்த லிஷாவின் முக்கிய அறிவிப்பு!

அதேபோல், தூதரக அலுவலகம் முன்பு உள்ள வாசலில் அழகான வண்ணப்பொடிகளை கொண்டு வரையப்பட்டிருந்த கோலம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. பொங்கல் பொங்கிய போது, அனைவரும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறி, தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.