சிங்கப்பூரில் மேலும் 1,103 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

racist-passenger-india-Singapore
Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (29/11/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (29/11/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 1,103 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 1,095 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில், சமூக அளவில் 1,070 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 25 பேருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 8 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,63,486 ஆக உயர்ந்துள்ளது.

“மலேசிய பிரதமரை சிங்கப்பூருக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி”- பிரதமர் லீ சியன் லூங்!

கொரோனாவால் மேலும் 9 பேர் உயிரிழந்தனர். இவர்கள் 58 முதல் 91 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 710 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,158 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 221 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், 79 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளின் கவனத்திற்கு!

கடந்த நாளில் 1,812 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 274 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.