சிங்கப்பூரில் மேலும் 1,324 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

healthcare workers colossal effort
(Photo: Ministry of Manpower)

சிங்கப்பூரில் கொரோனா தினசரி பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (01/12/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (01/12/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 1,324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சமூக அளவில் 1,311 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 1,266 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 45 பேருக்கும் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 13 பேருக்கும் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,66,049 ஆக உயர்ந்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் ப்ரீபெய்டு கார்டு பிரிவில் முன்னணி நாடாக உருவெடுத்த சிங்கப்பூர்!

கொரோனா பாதிப்பால் மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 59 மற்றும் 86 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 726 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,054 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 206 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 77 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கட்சிப் பொறுப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் ரயீசா கான்!

கடந்த நாளில் 1,535 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 289 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.