இந்த நாட்டுடன் சிங்கப்பூர் உடன்பாடு…கோவிட்-19 தடுப்பூசி, சோதனைச் சான்றிதழ்கள் இருதரப்பிலும் அங்கீகரிக்கப்படும்!

(Photo: Roslan Rahman / AFP/Getty Images)

சிங்கப்பூரின் டிஜிட்டல் கோவிட்-19 தடுப்பூசி மற்றும் சோதனைச் சான்றிதழ்கள் தற்போது தைவானில் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதாவது சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய இருதரப்பிலும் கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்படும்.

வெளிநாட்டில் கணவருக்கு வேலை… மனைவியின் தகாத காதல் – இதனால் நேர்ந்த கொடூரம்…!

இந்த நடவடிக்கை இரு எல்லைகளுக்கும் இடையேயான பயணத்திற்கான நடவடிக்கைகளை மேலும் எளிதாக்குவதற்கான சாதகமான ஏற்பாடு என்று தைபே நகரத்தில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகத்தின் முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு தீவுகளுக்கு இடையே பயணம் செய்ய விரும்புவோருக்கு, இந்த நடவடிக்கை பயண செயல்முறைகளை இலகுவாக்கும் என கூறப்பட்டுள்ளது.

10வது மாடியில் பற்றி எரிந்த தீ: மயங்கி கிடந்த பெண்…ஆடவர் கைது