சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக ஆடவர் மரணம்

(Photo: Tan Tock Seng Hospital/ Facebook)

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் ஏற்பட்ட மருத்துவ சிக்கல்களின் காரணமாக 70 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அவர் டான் டொக் செங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் என்றும் அது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

1 கி.மீ துரத்தி சென்று வெளிநாட்டு ஊழியரிடம் S$2 பணத்தை ஒப்படைத்த ஆடவர் – மெய்சிலிர்க்க வைத்த பதிவு

அவருக்கு ஏற்கனவே நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளும் இருந்ததாக MOH கூறியுள்ளது.

இதனுடன் சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.

அதே போல, அவர் COVID-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதும் கூடுதல் தகவல்.

தொற்று நோய்களுக்கான தேசிய நிலையம் அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளது, மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக MOH கூறியுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக 41 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – சமூக அளவில் 27 பேருக்கு தொற்று