சிங்கப்பூரில் புதிதாக 41 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – சமூக அளவில் 27 பேருக்கு தொற்று

(Getty Images)

சிங்கப்பூரில் இன்று, புதிதாக 41 பேருக்கு கோவிட் -19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.

அதனுடன் சேர்த்து சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,730ஆக உள்ளது.

சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறிய 8 பேருக்கு நிரந்தரமாக வேலைசெய்யத் தடை

உள்நாட்டில், சமூக அளவில் 27 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றில் 21 முன்பு தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையது.

மேலும், புதிய பாதிப்புகளில் 6 பேருக்கு இன்னும் தொடர்பு கண்டறியப்படவில்லை என்றும் MOH கூறியுள்ளது.

அவர்களில், 15 பேர் முன்பே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர் என்றும் அது கூறியுள்ளது.

மேலும், தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் MOH தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த 14 பேர் இந்த புதிய பாதிப்புகளில் அடங்குவர், அவர்கள் ஏற்கனவே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் வைக்கப்பட்டனர் அல்லது சிங்கப்பூர் வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 10 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் (PR) என்றும் அது கூறியுள்ளது.

சிங்கப்பூரில் 20க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டோர் சென்றனர்