1 கி.மீ துரத்தி சென்று வெளிநாட்டு ஊழியரிடம் S$2 பணத்தை ஒப்படைத்த ஆடவர் – மெய்சிலிர்க்க வைத்த பதிவு

(photo: mothership)

கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி அன்சன் என்ற நபர் அவரது டிக்டாக் கணக்கில் (@ansonlaoshi) காணொளி ஒன்றை வெளியிட்டார்.

அதில், நான் உடல் திறன் தேர்வுக்கு சென்று தங்கம் வென்றது இறுதியில் பயனளித்துவிட்டது என்ற சிறு தலைப்புடன் இருந்தது.

சிங்கப்பூரில் புதிதாக 41 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – சமூக அளவில் 27 பேருக்கு தொற்று

அந்த காணொளியில் அன்சன் வழக்கம் போல காலையில் நடையோட்டம் மேற்கொண்டு இருந்த போது கீழே S$2 பணத்தாள் இருந்ததை கண்டார்.

அவர் சுற்றி கவனித்த போது ஒருவர் அவருக்கு முன் மிதிவண்டியில் சென்று கொண்டு இருந்தார். அவர் வெளிநாட்டு ஊழியராக தான் இருக்க வேண்டும் என கணித்த அன்சன், இது அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் என்று எண்ணி எப்படியாவது அவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அவரை பின்தொடர்ந்தார்.

அதை காணொளியாக பதிவு செய்து கொண்டே சென்றார். தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து, போக்குவரத்துக்கு சிக்னல்களில் அவரை பின் தொடர சற்று தளர்த்தாலும், இறுதியில் அவரை கத்தி அலைத்து அவரிடம் பணத்தை கொண்டு சேர்த்தார்.

அந்த வெளிநாட்டு ஊழியர் தன் சட்டைப்பையில் தேடிவிட்டு பிறகு அது தன் பணம் என உறுதி செய்த பின் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

அன்சன் பதிவிட்ட காணொளியை பார்க்கும் போது அவர் அந்த நபரை சென்றடைய சில மைல் தூரம் பயணித்ததும், அதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்தது.

மனிதாபிமானத்தை பறைசாற்றும் மற்றொரு பதிவாக இது பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறிய 8 பேருக்கு நிரந்தரமாக வேலைசெய்யத் தடை