சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மூதாட்டி உயிரிழப்பு.!

Singapore Covid19 death
Pic: FB/ KTP Hospital

கொரோனா கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூரைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (ஜூன் 08) தெரிவித்துள்ளது.

கூ டெக் புவாட் (Khoo Teck Puat) என்ற அந்த மூதாட்டி மருத்துவமனையில் வேறொரு காரணத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அந்த மூதாட்டிக்கு கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மூதாட்டிக்கு கிருமித்தொற்று இருப்பது கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி கண்டறியப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்ற சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர்கள்!

மூதாட்டி இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும், அவருக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.

ஒரு வெளிநாட்டு ஊழியருக்கு பதில் 3 அல்லது 4 சிங்கப்பூர் ஊழியர்களை அமர்த்தும் நிலை..!