சிங்கப்பூரில் இந்த இடங்களுக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு இலவச ART பரிசோதனை கருவி.!

Singapore Covid19 selftest kits
Pic: Google Maps

சிங்கப்பூரில் கடந்த 14 நாட்களில் குறிப்பிட்ட சந்தைகள் மற்றும் உணவங்காடி நிலையங்களுக்கு சென்றவர்களுக்கு இலவச ஆன்டிஜென் சுய பரிசோதனைக் (ART) கருவிகளை வழங்க சுகாதார அமைச்சகம் மக்கள் கழகத்துடன் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.

Geylang Bahru சந்தை மற்றும் உணவு நிலையம் (69 Geylang Bahru), 146 Teck Whye Avenue சந்தை (146 Teck Whye Lane) ஆகிய இடங்களை சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் இன்று மற்றும் நாளை (ஜூலை 26,27) அருகில் உள்ள குழு நிலையங்களில் (Residents Committee Centres) சுய பரிசோதனைக் கருவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதிக வாடகையால் அவதிப்பட்டுவரும் லிட்டில் இந்தியா வணிகர்களுக்கு ஆதரவளிக்க கோரிக்கை!

இந்த ஆன்டிஜென் சுய பரிசோதனைக் கருவிகளை (ART) கருவிகளைப் பயன்படுத்த தகுதிவாய்ந்த நபர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது சந்தைகள், உணவங்காடி நிலையங்கள் சம்பந்தப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் குறித்த அமைச்சகத்தின் விசாரணையின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச ஆன்டிஜென் சுய பரிசோதனைக் கருவிகள் (ART) வழங்கப்படுவது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://www.gowhere.gov.sg/art என்ற இணையத்தளத்தை நடலாம்.

கடைக்குள் புகுந்து சிகரெட், ரொக்கம் திருட்டு – 26 வயது ஆடவர் கைது.!