சிங்கப்பூரில் 1 மில்லியனைத் தாண்டிய மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை!

Pic: AFP/Roslan Rahman

Singapore crossed the 1 million mark for Covid-19 cases: சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (மார்ச் 19) பதிவான கோவிட்-19 பாதிப்புகளுடன் சேர்த்து நாட்டின் மொத்த கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியது.

நேற்று நிலவரப்படி, புதிதாக 10,244 பேருக்கு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. அவர்களின் 10,102 பேர் உள்ளூர் மற்றும் 142 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தாராளமாக வர முடியுமா? – Work permit, S Pass ஊழியர்களுக்கு முன் அனுமதி வேண்டுமா?

இதன்மூலம் சிங்கப்பூரில் பதிவான மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை 1,007,158 ஆக உயர்ந்தது.

நேற்று நிலவரப்படி, மேலும் மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியது.

சிங்கப்பூரின் மொத்த கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை தற்போது 1,193 ஆக உள்ளது.

கூடுதல் விவரம்:

புதிய பாதிப்புகளில் 8,003 பேர் ART விரைவு சோதனை மூலம் கண்டறியப்பட்டனர்.

மேலும் 1,103 நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர்.

இதில் 127 பேருக்கு ஆக்ஸிஜன் தேவை உள்ளது.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் 27 நோயாளிகள் உள்ளனர்.

கல்லாங் ஸ்போர்ட்ஸ் சென்டரில் திடீரென மயங்கி கீழே விழுந்த ஆடவர் – சிகிச்சை பலனின்றி மரணம்