சிங்கப்பூரில் மேலும் 1,275 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Coronavirus: 100 more people fined for not wearing masks in public

சிங்கப்பூரில் கொரோனா தினசரி பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (25/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (25/11/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 1,275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதம் 21- ஆம் தேதிக்கு பிறகு பதிவாகியுள்ள குறைவான எண்ணிக்கையிலான பாதிப்புகள் ஆகும். உள்ளூர் அளவில் 1,259 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1,228 பேருக்கு சமூக அளவிலும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 31 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 16 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,58,785 ஆக உயர்ந்துள்ளது.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை’- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

கொரோனாவால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 69 முதல் 74 வயத்துக்குட்பட்டவர்கள் ஆவர். கடந்த அக்டோபர் 7- ஆம் தேதிக்கு பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 681 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 1,251 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 206 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 86 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரின் உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளது.

130- வது ஆண்டை நிறைவு செய்த ஷெல் நிறுவனத்துக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து!

கடந்த நாளில் 3,223 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 481 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.