Breaking: ஜன. 7, 2022 முதல், VTL அல்லாத பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை எளிதாக்கும் சிங்கப்பூர்!

தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயண திட்டத்தின்கீழ் (VTL), வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சிங்கப்பூர் கோவிட்-19 நடவடிக்கைகளை எளிதாக்கும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று (டிசம்பர் 31) அறிவித்துள்ளது.

கிருமித்தொற்று ஆபத்து அடிப்படையில் பட்டியலிடப்பட்ட, “வகை 2” முதல் “வகை 4” வரை உள்ள நாடுகளைச் சேர்ந்த VTL அல்லாத பயணிகள், வருகையின்போது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.

VTL சேவை மீண்டும் தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா…?

இது வரும் ஜன. 7, 2022 அன்று இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், “வகை 2” மற்றும் “வகை 3” நாடுகளைச் சேர்ந்த பயணிகள் முறையே ஏழு மற்றும் 10 நாட்களுக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை (SHN) நிறைவேற்ற வேண்டும்.

மேலும், “வகை 4” பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் அரசாங்க ஏற்பாடு வசதியில் 10 நாட்கள் SHN உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

“Omicron கிருமி பற்றிய கூடுதல் தகவல்களை சேகரித்துள்ளதால், VTL அல்லாத பயணிகளுக்கான வருகை சோதனைகள் இனி தேவையில்லை என மறுஆய்வு செய்துள்ளோம்,” என்று MOH கூறியது.

ஹாங்காங், மக்காவ், சீனா மற்றும் தைவான் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் “வகை 1” இன் கீழ் வருவர்.

அவர்களுக்கு SHN தனிமை தேவையில்லை, அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் வரும் பயணியா நீங்க?? – அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்!