பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது சிங்கப்பூர்!

(PHOTO: Dhany Osman/Yahoo News Singapore)

 

சிங்கப்பூரில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டக் கட்டுப்பாடுகளால், பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

“தினசரி கொரோனா பாதிப்பு விரைவில் 1,000- யை எட்டக்கூடும்”- சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (17/09/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை அடிப்படையில் நாடுகளை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் பிரிவில் ஹாங்காங், சீனா, தைவான், மக்காவ், மெயின்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை.

இரண்டாவது பிரிவில் சவூதி அரேபியா, கனடா, புரூணை, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து, போலந்து, தென் கொரியா ஆகிய எட்டு நாடுகள் இடம் பெற்றுள்ளனர். இந்த நாடுகளில் இருந்து புறப்படுவோர், 48 மணி நேரத்திற்கு முன்னதாக பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டு, அதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். இங்கு தரையிறங்கும் போது பயணிகள் மீண்டும் தங்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். பின்னர், அவர்கள் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்த அமைச்சர் கா.சண்முகம்!

மூன்றாவது பிரிவில் ஆஸ்திரியா, பல்கேரியா, டென்மார்க், பிரான்ஸ், பின்லாந்து, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், செக் குடியரசு, சுவிட்சர்லாந்து, எகிப்து உள்ளிட்ட 20 நாடுகள் இடம் பெற்றுள்ளனர். இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, பிசிஆர் பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழைக் கையில் வைத்திருக்க வேண்டும். இங்கு தரையிறங்கும் போது பயணிகள் மீண்டும் தங்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பின்னர் 14 நாட்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ள தனிமைப்படுத்திக் கொள்ளும் இடத்திலோ தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது, மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 11- வது நாளில் சுயமாக மூக்கு திரவ பரிசோதனை (ART Self- Swab Test) செய்ய வேண்டும். பின்னர், கடைசி நாளில் பிசிஆர் (PCR) பரிசோதனை செய்ய வேண்டும்.

நான்காவது பிரிவில் மற்ற நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, பிசிஆர் பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழைக் கையில் வைத்திருக்க வேண்டும். இங்கு தரையிறங்கும் போது பயணிகள் மீண்டும் தங்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் இடங்களில் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும். அப்போது, மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 11- வது நாளில் சுயமாக மூக்கு திரவ பரிசோதனை (ART Self- Swab Test) செய்ய வேண்டும். பின்னர், கடைசி நாளில் பிசிஆர் (PCR) பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்றால் 0.6% குழந்தைகள் மட்டுமே பாதிப்பு!

இந்த புதிய நடைமுறை வரும் செப்டம்பர் 22- ஆம் தேதி அன்று நள்ளிரவு 11.59 PM மணி முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்ட புரூணை, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தடுப்பூசிப் பயணத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இந்தோனேசியாவிற்குச் சென்றிருந்த பயணிகள், சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். கடந்த 21 நாளில், இந்தோனேசியா சென்ற பயணிகளுக்கும் அது பொருந்தும். அவர்கள், சிங்கப்பூர் வந்தவுடன் பிசிஆர் பரிசோதனையைச் செய்வது கட்டாயம். இந்த புதிய நடைமுறை வரும் செப்டம்பர் 22- ஆம் தேதி அன்று நள்ளிரவு 11.59 PM மணி முதல் அமலுக்கு வருகிறது”. இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.