சிங்கப்பூர் கார்பன் உமிழ்வு 2025-2028க்கு இடையில் உச்சத்தை எட்டும்

சிங்கப்பூரின் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் 2025 மற்றும் 2028 க்கு இடையில் உச்சத்தை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்னர் 2030 இலக்காக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ இன்று செவ்வாயன்று (நவம்பர் 8) தெரிவித்தார்.

கடலில் மூழ்க தொடங்கிய கப்பல்… பதறிய புலம்பெயர்ந்த 300 பேர் – விரைந்து சென்று காப்பாற்றிய சிங்கப்பூர் அதிகாரிகள்

இந்த உமிழ்வு உச்சத்தை சிங்கப்பூர் எப்போது எதிர்பார்க்கிறது என்ற நாடாளுமன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

சிங்கப்பூர் உமிழ்வு வெளியேற்றத்தை 2030 ஆம் ஆண்டில், 60 மில்லியன் டன்களுக்கு இணையான கார்பன் டை ஆக்சைடுக்கு (MtCO2e) குறைக்கும் என்று திரு வோங் கூறினார்.

2030 ஆம் ஆண்டிற்கு முன்னதாக அது உச்சத்தை எட்டுவது குறிப்பிட வேண்டிய விஷயம் என்றார்.

மேலும் தொழில், பொருளாதாரம் மற்றும் சமூகம் முழுவதிலும் கணிசமான மாற்றங்கள் தேவைப்படுவதாகவும் திருமதி ஃபூ கூறினார்.

சிராங்கூன் சாலை தீபாவளி பண்டிகை ஒளியூட்டு அலங்கரிப்பில் தீ விபத்து