சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தை மேலும் சில நாடுகளுக்கு நீட்டித்த சிங்கப்பூர்….வரவேற்பு தெரிவித்த பயண முகவர்கள்!

Singapore
(Photo: TODAY)

சிங்கப்பூர் அரசு கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தை (Vaccinated Travel Lanes- ‘VTLs’) அறிமுகப்படுத்தி சர்வதேச விமான போக்குவரத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, புரூணை, ஜெர்மனிக்கு விமான போக்குவரத்து ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஸ்பெயின், நெதர்லாந்து, டென்மார்க், பிரிட்டன், தென்கொரியா, இத்தாலி ஆகிய ஒன்பது நாடுகளுக்கு விரைவில் விமான போக்குவரத்து தொடங்கவுள்ளது.
.
தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தை மேலும் சில நாடுகளுக்கு விரிவுப்படுத்தியது சிங்கப்பூர்!

சிறப்பு பயணத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்கு வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இதனால் சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வரும் மாதங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வருவதால், தங்களது குடும்பத்தினருடன் சிங்கப்பூர் வருவார்கள் எனக் கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

இந்த நிலையில், அரசு அனுமதி அளித்துள்ள நாடுகளுக்கு அதிகளவில் விமானங்களை இயக்கத் தேவையான நடவடிக்கைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்க அனுமதி அளித்துள்ள அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள, பயண முகவர்கள் எங்கள் தொழில் மீண்டெழும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா பரிசோதனை குறைப்பு, தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்ற அரசின் அறிவிப்பு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.