தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தை மேலும் சில நாடுகளுக்கு விரிவுப்படுத்தியது சிங்கப்பூர்!

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 75% கடந்துள்ளது. தொடர்ச்சியாக, கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் மேலும் சில கட்டுப்பாடுகளுடன் விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஒவ்வொரு நாடுகளும் அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- 100 பேர் பத்திரமாக வெளியேற்றம்!

இந்த நிலையில், சிங்கப்பூர் அரசு கடுமையான கட்டுப்பாடுகளுடன், கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தின் (Vaccinated Travel Lanes- ‘VTLs’) கீழ் ஜெர்மனி, புரூணை ஆகிய நாடுகளுக்கு இடையே இரு மார்க்கத்திலும் விமான போக்குவரத்தைத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, இந்த திட்டத்தின் கீழ் மேலும் சில நாடுகளுக்கும் விமான போக்குவரத்தைத் தொடங்குவதற்காக சிங்கப்பூர் அரசு விரிவுப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பயணிகள் சிங்கப்பூர் ‘ஏர் டிராவல் பாஸ்’- க்கு (Air Travel Pass) safetravel.ica.gov.sg என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

“புதிய நிலையை அடைய மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம்”- பிரதமர் லீ உரை!

சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் 48 மணி நேரத்திற்கு முன்பு பிசிஆர் கொரோனா பரிசோதனை எடுத்து, ‘நெகட்டிவ்’ என்ற முடிவுக்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். பின்னர், சாங்கி விமான நிலையம் வந்தவுடன் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த பயணத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் 4- லிருந்து 2- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் 19- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலே, குறிப்பிடப்பட்டுள்ள எட்டு நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களுக்கான விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 12- ஆம் தேதி அன்று காலை 10.00 AM மணிக்கு தொடங்குகின்றன. நவம்பர் 15- ஆம் தேதி முதல், தென்கொரியாவில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 8- ஆம் தேதி அன்று காலை 10.00 AM மணிக்கு தொடங்குகிறது.” இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தின் கீழ் மேலும் ஒன்பது நாடுகளுக்கு விமான சேவை தொடங்க உள்ள நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிக விமானங்கள் இயக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, ஜெர்மனி, புரூணை ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்ற அறிவிப்பால், சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.