சிங்கப்பூர் சோதனை சாவடிகளில் கருவிழி மற்றும் முக ஸ்கேன் முறை கொண்டு வர திட்டம்..!!

Singapore Face Scanning Immigrations
Photo credit : Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் குடியேற்ற (Immigrations) சோதனைக்கு, கைரேகை ஸ்கேனிங் முறைக்கு பதிலாக கருவிழி மற்றும் முக ஸ்கேன் முறைக்கு மாறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கருவிழி மற்றும் முக ஸ்கேன் முறை, கைரேகை ஸ்கேனிங் முறையை விட நம்பகமானது என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்த ஆண்டு தீமிதித் திருவிழா குறித்து இந்து அறக்கட்டளை வாரியத்தின் அப்டேட்..!

இதன் அம்சங்களை ஒப்பிடும் போது, கருவிழி மற்றும் முக ஸ்கேன் முறை 250 புள்ளிகளையும் மற்றும் கைரேகை ஸ்கேனிங் முறை 100 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.

சிறப்பு கருவிகள் மூலம் கருவிழி மற்றும் முக ஸ்கேன் முறையில் எவ்விதமான மோசடியும் நடக்காமல் தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வியர்வை போன்ற காரணங்களால் கை உலர்ந்து போதல் போன்ற பிரச்சினைகளால் ரேகைகளில் தேய்மானம் ஏற்படலாம் என்பதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கருவிழி மற்றும் முக ஸ்கேன் முறை 6 வயதிற்கும் குறைவான சிறுவர்களுக்கு பொருந்தாது.

இந்த முறையை 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குறிப்பிட்ட 9 நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் குறித்த அறிவிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…