இந்திய நிதியமைச்சருடன் சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் சந்திப்பு!

Lawrence Wong official visit to India
Photo: Singapore Finance Minister Official Facebook Page

ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்துக் கொண்ட இரண்டாவது கூட்டம், அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நேற்று முன்தினம் (20/04/2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ரஷ்யா, துருக்கி, தென்னாபிரிக்கா, சவூதி அரேபியா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.

சிங்கப்பூரில் காணாமல் போயிருந்த சிறுமி பத்திரமாக கிடைத்தார் – பகிர்ந்த Micset வாசகர்களுக்கு நன்றி!

அந்த தொடர்ச்சியாக, ஜி20 கூட்டத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, பொருளாதாரம், இறக்குமதி, ஏற்றுமதி, உலகச் சந்தை நிலவரங்கள் உள்ளிட்டவைக் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் கூறுகின்றன.

தவறான உறவு கொண்டதாக வெளிநாட்டவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, 3 பிரம்படி!

அதேபோல், இந்தோனேசியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் நிதியமைச்சர்களையும், அமைச்சர் லாரன்ஸ் வோங் சந்தித்துப் பேசினார். வரும் ஏப்ரல் 25- ஆம் தேதி வரை அமைச்சர் லாரன்ஸ் வோங் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.