கடைகளில் கடல் உணவுகள் தீர்ந்துபோகும் நிலை ஏற்படுமா.? – அமைச்சர் விளக்கம்.!

Singapore fish stall seafood
Pic: AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் உள்ள கடைகளில் கடல் உணவுகள் தீர்ந்துபோகும் நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) கூறியுள்ளார்.

ஜூராங் மீன் வர்த்தக துறைமுகத்தில், புதிதாக கிருமித்தொற்று குழுமமாக உருவெடுத்துள்ள நிலையில், வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை மூடப்படும் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

நிலம், கடல் வழி மற்றும் நேரடியாகக் கூடுதல் கடல் உணவுகளை கொண்டுவர மொத்த விற்பனையாளர்கள் சிலரிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், ஈரச்சந்தை வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முக்கிய பேரங்காடிகளிடம் போதிய கடல் உணவுகள் இருப்பதாகவும் அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

வார் மெமோரியல் பார்க் குளத்தில் ஷர்ப்போர்ட் மூலம் உலாவிய ஆடவர் மீது போலீசில் புகார்

கடல் உணவு இறக்குமதியை மாற்று இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) தெரிவித்துள்ளது.

இருப்பினும், பதப்படுத்தப்பட்ட மற்றும் குளிரூட்டப்பட்ட கடல் உணவு வகைகள் கிடைக்கும் என்றும் SFA கூறியுள்ளது.

Senoko மீன் வர்த்தகத் துறைமுகத்தின் செயல்பாடுகள் தொடர்வதை உறுதிசெய்ய அரசாங்கம் விரைந்து செயல்பட்டதாக அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியோர்கள் வீட்டிலேயே இருங்கள் – அமைச்சர் திரு. வோங்.!