தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியோர்கள் வீட்டிலேயே இருங்கள் – அமைச்சர் திரு. வோங்.!

Unvaccinated elderly stay home
Pic: Nuria Ling/TODAY

COVID19-க்கு எதிரான தடுப்பூசியை இன்னும் போட்டுக்கொள்ளாத மூத்தோர்கள் முடிந்தவரையிலும் வீட்டிலேயே இருக்கும்படி அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழுவின் இணைத்தலைவர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத்துடன் தொடர்புடைய COVID-19 சம்பவங்கள் அதிகரித்துவரும் சூழ்நிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 36 பேரிடம் விசாரணை

COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வயதானவர்கள், அத்தியாவசிய தேவையிருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு அமைச்சர் திரு. வோங் கேட்டுக்கொண்டுள்ளார்.

வயதானவர்கள் பலர், வீடமைப்பு வட்டாரத்தில் உள்ள கடைகள் மற்றும் ஈரச்சந்தைக்கும் வழக்கமாகச் செல்கிறார்கள், அப்போது அவர்களுக்கு கிருமித்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக திரு. வோங் கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வயதானவர்களுடன் சேர்ந்து வசிக்கும் நபர்களும் ஆலோசனையைப் பின்பற்றவேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருந்தாலும் கிருமித்தொற்று பரவல் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள மூத்தோர்கள் அனைவரும் விரைவாக COVID-19க்கு எதிரான தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு திரு. வோங் கேட்டுக்கொண்டார்.

உணவகங்களில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.!