உணவகங்களில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.!

foreigner fined warning spore
Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் உள்ள உணவகங்கள் மற்றும் பானக் கடைகளில் இன்று (19-07-2021) முதல் மீண்டும் இரண்டு பேர் வரை மட்டுமே குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். இந்த கட்டுப்பாடு வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

உணவகங்கள் மற்றும் பானக் கடைகளில், 5 பேர் வரையிலான குழுக்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமூக அளவில் அதிகரித்து வரும் கிருமித்தொற்று பரவலை தடுக்க, கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுவதாக அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு தெரிவித்துள்ளது.

முழுமையாக COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 5 பேர் வரை குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். இருப்பினும், இது சிலஉணவங்காடி நிலையங்கள், காப்பி கடைகள் போன்ற இடங்களுக்கு பொருந்தாது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டு இரண்டு வாரம் ஆனவர்கள், COVID-19-லிருந்து குணமடைந்தவர்கள் (270 நாட்களுக்குள்) கிருமித்தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவை வைத்திருப்பவர்கள், 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் போன்றவர்களுக்கு
5 பேர் வரை குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும்.

பொதுமக்கள் தாங்கள் கலந்துகொள்ளும் சமூக ஒன்றுகூடல்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்கும்படி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பான் தீவு விரைவுச் சாலையில் விபத்து- ஏழு மாத குழந்தை உள்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!