சவுதி அரேபியாவில் சிங்கப்பூர் எண்ணெய் கப்பலில் தீ வெடிப்பு!

Singapore-flagged oil tanker Explosion
Singapore-flagged oil tanker Explosion (PHOTO: Tony Hogwood / MarineTraffic)

சவூதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்தில் இருந்து கப்பல் வெளியேறும் போது, அதன் எண்ணெய் டேங்கர்களில் ஒன்றான BW Rhine மோதப்பட்டு பாதிப்புக்குள்ளானதாக கப்பல் நிறுவனம் Hafnia தெரிவித்துள்ளது.

டேங்கர் சம்பந்தப்பட்ட இந்த வெடிப்பு தொடர்பான விசாரணைகள் நடந்து வருவதாக, UK கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் இலவச COVID-19 தடுப்பூசி; ஆனால் கட்டாயமில்லை – பிரதமர் லீ

மேலும், ஜெட்டா துறைமுகம் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று குறிப்பிடாமல் மூடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கப்பலில் உள்ள குழுவினர் அதில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் காயமில்லை.

இதில் கப்பலின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்த டேங்கர் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி அன்று யான்பு (Yanbu) துறைமுகத்தில் இருந்து சுமார் 60,000 டன் பெட்ரோலை நிரப்பியது என்றும், இது தற்போது 84 சதவீதம் நிரம்பியுள்ளது என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிங்கப்பூரில் சுமார் 450,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொடர்பு கண்டறியும் சாதனங்கள்!

சிங்கப்பூர் 3ஆம் கட்டம்: வெளிநாட்டு ஊழியர்களுக்கு…!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…