சிங்கப்பூரில் கனமழை: திடீர் வெள்ளம், மரம் முறிந்து விழுந்தது..!

Pub flash flood warning
Pic: SGRV/FB

சிங்கப்பூரில் 9 இடங்களில் கனமழை காரணமாக வெள்ள அபாயம் உள்ளதாக பொது பயனீட்டு கழகம் (PUB) தெரிவித்துள்ளது.

நேற்று நவம்பர் 2ம் தேதி, தேசிய நீர் நிறுவனமான பொது பயனீட்டு கழகம் (PUB) வெள்ள அபாயங்கள் உள்ள பகுதிகள் குறித்து எச்சரிக்கை விடுத்தது.

சிங்கப்பூரில் புதிதாக ஒரே ஒருவருக்கு கிருமித்தொற்று பாதிப்பு..!

பின்வரும் பகுதிகளின் வடிகால் மற்றும் கால்வாய்களில் நீர் நிலைகள் 90 சதவீத திறனை எட்டியுள்ளதாக PUB கூறியது.

வெள்ள அபாயம் உள்ள இடங்கள்

  • Siang Kuang Ave
  • Jalan Lokam/Upper Paya Lebar Road
  • Puay Hee Ave/Siak Kew Ave
  • Sims Drive/Blk 56
  • Lor Ong Lye/Lor Lew Lian
  • Happy Ave North (Lamp Post 11)
  • Macpherson Road/Playfair Road
  • Sg Serangoon Branch (Hougang Ave 7)
  • Playfair Road OD (Bartley Road East)

திடீர் வெள்ளம்

Upper Paya Lebar Road, Mount Vernon Road மற்றும் Lorong Gambir ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களுக்கு PUB-ன் விரைவு குழுக்கள் உடனடியாக சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

முறிந்து விழுந்த மரம்

மேலும், Macpherson சாலையில் இருபுற பாதைகளையும் தடுத்தவாறு மழையில் மரம் விழுந்து கிடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 300,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கண் பராமரிப்பு திட்டம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…