சிங்கப்பூரில் புதிதாக ஒரே ஒருவருக்கு கிருமித்தொற்று பாதிப்பு..!

Singapore reports COVID-19
(Photo: Singapore Ministry of Manpower)

Singapore reports 1 new COVID-19: சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 2) ஒரே ஒருவருக்கு COVID-19 கிருமித்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தனது தினசரி புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட அந்த நபர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர், இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டார்.

ராபின்சன் மூடல் எதிரொலி: வாடிக்கையாளர்கள் புகார்.

சிங்கப்பூரில் இன்றுடன் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிதாக யாரும் உள்ளூர் அளவில் பாதிக்கப்படவில்லை.

இந்த புதிய பாதிப்புடன் சேர்த்து, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 58,020ஆக உள்ளது.

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியில் இருந்து சிங்கப்பூரில் பதிவான புதிய COVID-19 பாதிப்புகளின் எண்ணிக்கையில், இதுவே மிகக் குறைந்த தினசரி எண்ணிக்கை ஆகும்.

மேலும் விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மேலும் எட்டு புதிய வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…