சிங்கப்பூர் ராட்டினம் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் நாளை திறக்கப்படும்..!

Singapore Flyer to reopen on Jul 23, allow up to 7 guests in a capsule
Singapore Flyer to reopen on Jul 23, allow up to 7 guests in a capsule (Photo: Facebook/Singapore Flyer)

சிங்கப்பூர் ராட்டினம் மீண்டும் நாளை (ஜூலை 23) பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறக்கப்படும் என்று அதன் இயக்க நிறுவனம் Straco Leisure செவ்வாயன்று ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

COVID-19 பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி இந்த ராட்டினம் மூடப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 310 பேர் பாதிப்பு – சமூக அளவில் 7 பேருக்கு தொற்று உறுதி..!

பாதுகாப்பு இடைவெளியை உறுதி செய்யும் நோக்கில், சிங்கப்பூர் ராட்டினம் மீண்டும் திறக்கும்போது அதன் இயக்க திறனை கணிசமாக குறைக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது வருகையாளர்கள் ஐந்து பேர் மட்டுமே ஒரு குழுவாக வரையறுக்கப்படுவர், மேலும் ஒவ்வொரு பெட்டியிலும் அதிகபட்சமாக 7 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

“ஒவ்வொரு ராட்டின பயணத்திற்கும் பின்னர், வருகையாளர்கள் அமர்ந்து பயணம் செய்த பெட்டி கிருமி நீக்கம் செய்யப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக உடல்வெப்ப நிலையை பரிசோதனை, SafeEntry பயன்படுத்துதல், பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவை பின்பற்றப்படும்.

அனைத்து வருகையாளர்களும் இணையத்தில் தங்கள் வருகைக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும், ஏனெனில் டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 4ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg