சிங்கப்பூரில் புதிதாக 310 பேர் பாதிப்பு – சமூக அளவில் 7 பேருக்கு தொற்று உறுதி..!

310 new COVID-19 cases in Singapore, including 7 community infections
310 new COVID-19 cases in Singapore, including 7 community infections

சிங்கப்பூரில் நண்பகல் (ஜூலை 22) நிலவரப்படி, புதிதாக 310 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 48,744ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 247,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிருமித்தொற்று இல்லை..!

புதிய சம்பவங்களில், 7 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது

அதில், 3 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும், 4 பேர் வேலை அனுமதி பெற்றவர் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த 6 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வந்தபின் தனிமையில் வைக்கப்பட்டனர்.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.

இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 4ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg