சிங்கப்பூரில் கள்ளத்தனமாக காய்கறிகள் இறக்குமதி; அதிகாரிகள் நடவடிக்கை.!

Singapore food organisation
Pic: Getty Images

சிங்கப்பூரில் சுங்கத் தீர்வை செலுத்தாமல் கள்ளத்தனமாக காய்கறிகளை இறக்குமதி செய்த காய்கறி வர்த்தகருக்கு 4,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியுள்ளது.

இயோ சியாப் என்னும் காய்கறி வர்த்தகர் சந்தை காய்கறி விநியோக நிறுவனத்தின் உரிமம் பெற்றவராவார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறக்குமதி செய்த பொருட்களில் 63 கிலோ காய்கறிகள் இருப்பதைக் சிங்கப்பூர் உணவு அமைப்பின் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரயில் சேவை தொடர்பாக போக்குவரத்து நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சிங்கப்பூரில் காய்கறி இறக்குமதி செய்பவர்கள் சிங்கப்பூர் உணவு அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கவேண்டும். காய்கறி இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெறுவதும் ஒவ்வொரு சரக்கைப் பற்றிய முழு விவரம் அளிப்பதும் இவற்றில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிற்குள் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பது தெரியாது. ஆகையால் அவை உணவு பாதுகாப்புக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம் என்றும், அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து உள்ள காய்கறிகளை அடிக்கடி சாப்பிட்டால், உடல்நலத்திற்கு கேடு ஏற்படக்கூடும் என்றும்
சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

பிபிஇ கிட், கையுறை அணிவது தொடர்பாக சாங்கி விமான நிலைய ஊழியர்களுக்கு பயிற்சி!