ஜெர்மனிக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார்.

இந்தியாவின் தூய்மைக்கு மானியம் வழங்கும் சிங்கப்பூர் DBS – பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த இந்தியாவுடன் சிங்கப்பூர்

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஏப்ரல் 3- ஆம் தேதி முதல் ஏப்ரல் 5- ஆம் தேதி வரை ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தவும், முக்கிய பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஜெர்மனியின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பெயர்போக்கை (German Federal Foreign Minister Annalena Baerbock) இன்று (04/04/2022) சந்திக்கவுள்ளார். பின்னர், அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பையும் நடத்தவுள்ளனர்.

எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்வு: சொந்த நாடு திரும்பிய “சிங்கப்பூரில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மலேசிய ஊழியர்கள்”

இந்த பயணத்தின் போது, ​​அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், மூத்த வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கிறார். அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் ஜெர்மனி சென்றுள்ளனர்”. இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.