வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தேவையான மாற்றம் – ஆய்வு!

(PHOTO: MOM)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 கிருமித்தொற்று அதிகம் பாதித்தது என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

தங்கும் விடுதிகளில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டனர்.

சிங்கப்பூர் ஜலான் சுல்தான் பகுதியில் சண்டை – 7 பேர் கைது

இந்த தாக்கத்தின் காரணமாக, விடுதிகளில் உள்ள ஊழியர்களால் தங்களுக்கு தேவையான சிறு நடவடிக்கைகளில் கூட ஈடுபட முடியவில்லை.

இதில் ஊழியர்கள், கழக வீடுகள், மிதக்கும் ஹோட்டல், சிறப்பு முகாம் உள்ளிட்ட பல்வேறு தங்கும் வசதிகளுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த மாற்றம் காரணமாக விடுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைக்க முடிந்தது.

விரைவாக அமைக்கப்பட்ட விடுதிகளில் தனிப் படுக்கைகள், கூடுதல் இட வசதி, 5 பேருக்கு கழிப்பறை என்ற மாற்றம் முன்னோட்டமாக மேற்கொள்ளப்பட்டன.

சில நிறுவனங்கள் வேலை இடங்களில் தங்களின் ஊழியர்களுக்கு தற்காலிகத் தங்குமிடங்களை அமைத்துக் கொடுத்துள்ளன என்பதும் கூடுதல் தகவல்.

சிங்கப்பூரில் பணியாற்றிவந்த தமிழக ஊழியர் மரணம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…