வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை மின்னிலக்க முறையில் வழங்கும் முதலாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

Moderna/Spikevax vaccine jabs
Photo: TODAY

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் வசிக்கும் 90 சதவீதத்திற்கு அதிகமான ஊழியர்கள் மின்-கட்டண முறையை பயன்படுத்தி வருகின்றனர் என்று “செய்தி” குறிப்பிட்டுள்ளது. அதற்கு முன்னர் சுமார் 76 சதவீத ஊழியர்கள் அதனை பின்பற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஊழியர்களின் சம்பளத்தை மின்னிலக்க முறையில் வழங்கும் முதலாளிகளின் எண்ணிக்கையும் சிங்கப்பூரில் தற்போது அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டில் இருந்து வந்த வேலை அனுமதி உடையோருக்கு தொற்று பாதிப்பு..!

சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மின்-கட்டண முறைக்கு மாறுவது வெளிநாட்டு ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது.

இருப்பினும் அது தொடர்பில் உதவிகோரி அதிகமான அழைப்புகள் வருவதாக வெளிநாட்டு ஊழியர் நிலையம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களில் வசித்து வரும், S Pass வேலை அனுமதி வைத்திருப்போருக்கு சம்பளம், மின்-கட்டண முறை மூலம் வழங்கப்படுகிறது.

அதே வேளையில், வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்கள் அல்லாத இடங்களில் சுமார் 85,000 ஊழியர்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு இந்த முறையில் சம்பளம் வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் செய்தி குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து வரும் நாட்களில் தமிழகம் செல்லும் விமானங்களின் அப்டேட்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…