“வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச்செல்லும் நடைமுறை மாறும் பட்சத்தில் தொழில்துறை பாதிக்கும்”

வேலையுடன் சேர்த்து லாரியும் ஓட்டும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டம் இது - தெரிந்துகொள்ளுங்கள்
(Photo: Reuters/Edgar Su)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச்செல்லும் முறையில் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து போக்குவரத்து அமைச்சகம் மறுஆய்வு செய்துவருவதாக மூத்த போக்குவரத்து அமைச்சர் எமி கோர் தெரிவித்துள்ளார்.

சாலை பாதுகாப்பு குறித்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, லாரிகள் எந்தவொரு பயணிகளையும் ஏற்றி செல்லக்கூடாது என்பது விளங்கும், ஆனால் இதில் குறிப்பிடத்தக்க நடைமுறை செயல்பாட்டு சிக்கல்கள் இருப்பதாக அவர் கூறினார்.

சிங்கப்பூரில் கணவர் உயிரிழப்பு – குழந்தையை வளர்க்க பாடுபடும் மனைவி!

இதில் கூடுதல் பாதுகாப்பான விதிமுறைகள் கட்டட மேம்பாட்டு திட்டங்கள் முடிவடைவதற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், கட்டுமானத் துறையில் உள்ள சிறு, நடுத்தர நிறுவனங்கள் லாரிகளின் பின்புறம் ஊழியர்களை தொடர்ந்து கொண்டு செல்ல அனுமதிக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

சில நிறுவனங்கள் மூடல், மேலும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாவதற்கு அந்த நடைமுறை மாற்றம் காரணமாகலாம் என்றும் அவர் கூறினார்.

தொழில்துறை சங்கங்கள், பேருந்தில் ஏற்றிச் செல்ல கணிசமாக செலவுகள் அதிகரிக்கும் என்று வலுவான கருத்துக்களை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை தொடர்ந்து அரசாங்கம் மேம்படுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.

2,750 ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என உறுதி