2,750 ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என உறுதி

(PHOTO: Reuters)

பாசிர் பாஞ்சாங் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட COVID-19 சோதனையில் ஊழியர்கள் பலருக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகாரிகள் சிங்கப்பூர் துறைமுகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்துள்ளது.

ஜெரூசலத்தில் வன்முறை – ஆழ்ந்த அக்கறை தெரிவித்த சிங்கப்பூர்

இந்த கூடுதல் நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் துறைமுக இயக்குனர் PSA சிங்கப்பூருடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ஆணையம் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

சுமார் 4,000 துறைமுக ஊழியர்களுக்கு சிறப்பு சோதனை நடவடிக்கைகளை MPA, MOH மற்றும் PSA ஆகியவை தொடங்கின.

அவர்களில் 2,750 ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் முன்னிலை ஊழியர்களுக்கு வழக்கமான சோதனை இனி 14 நாட்களிலிருந்து ஏழு நாட்களாக மாற்றப்படும்.

கிருமி பரவும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு அனைத்து ஊழியர்களுக்கும், அதாவது தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் போடாமல் இருந்தாலும் இது பொருந்தும்.

முதியவரை காப்பாற்ற போராடிய சிறுவன்… விருது வழங்கி கௌரவித்த சிங்கப்பூர்