ஜெரூசலத்தில் வன்முறை – ஆழ்ந்த அக்கறை தெரிவித்த சிங்கப்பூர்

Singapore 'deeply concerned' by violence in Jerusalem
(Photo: AP Images)

ஜெரூசலத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து சிங்கப்பூர் தனது ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், வன்முறையை கட்டுக்குள் கொண்டுவரவும் அனைத்து தரப்பினரையும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது.

முதியவரை காப்பாற்ற போராடிய சிறுவன்… விருது வழங்கி கௌரவித்த சிங்கப்பூர்

ஜெரூசலத்தில் ஹராம் அல்-ஷெரீப் மற்றும் ஷேக் ஜர்ரா உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து சிங்கப்பூர் ஆழ்ந்த அக்கறை வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூன்று வாரங்களுக்கு முன்பு ரமலான் தொடக்கத்தில் ஜெருசலேமில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன, பிரபலமான இடத்தில் இஸ்ரேல் கூட்டங்களை தடை செய்தது.

இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பார்வைத்திறன் குறைபாடுடைய முதியவருக்கு உதவிய தமிழக ஊழியர் – குவியும் பாராட்டு