சிங்கப்பூரில் தங்கம் விலை 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவு

Singapore gold price
Pexel

சிங்கப்பூரில் தங்கம் விலை 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளது.

தங்கம் என்பது அனைவருக்கும் விருப்பமான சொத்து. குறிப்பாக தமிழ் பெண்களுக்கு தங்கம் என்பது ஒரு பொக்கிஷம் போன்றது.

உடல்நிலை சரியில்லாத வெளிநாட்டு ஊழியர்.. விடுதிக்கு திரும்ப பேருந்துக்காக 3 மணிநேரம் காத்திருந்த சோகம்

விழா காலங்களில் ஆபரண தங்கத்தை வாங்குவோர் ஏராளம், குறிப்பாக தீபாவளி பண்டிகை நெருங்கும் இவ்வேளையில் அதன் விலை குறைந்திருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

கடந்த புதன்கிழமை நிலவரப்படி, 24 கேரட் ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை 81.40 வெள்ளிக்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதன் விலை 78.60 வெள்ளி என்று சரிவை சந்தித்தது.

அது மேலும் சரிந்து திங்கள்கிழமை நிலவரப்படி 78.30 வெள்ளி என்ற நிலையில் விற்கப்பட்டது.

இதன் காரணமாக கடந்த வார இறுதியில் நகை கடைகளில் நல்ல கூட்டம் இருந்ததை நம்மால் காண முடிந்தது.

மேலும், விலை குறையும் பட்சத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை.. $2 கொடுத்து சட்டவிரோத லாரி சேவையில் பயணிக்கும் நிலை