சிங்கப்பூரில் தங்கத்தின் விலை புதிய உச்சம்.. $S100 வெள்ளியை தாண்டிய ஒரு கிராம் தங்கம்

Singapore gold price
Pexel

சிங்கப்பூரில் தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்து, ஒரு கிராம் $S100 வெள்ளியை தாண்டியதாக நகைக் கடைகள் கூறுகின்றன.

சில முக்கிய கடைகளில் தங்க நகை ஒரு கிராமின் விலை $S100 வெள்ளியை தாண்டி விற்கப்படுவதாக வாசகர்கள் கூறுகின்றனர்.

உலகளவில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் மதிப்புடைய ஒரு பவுன் ரூ.54,000ஐ தாண்டி விற்பனையாவதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை உலக அளவில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் இந்த விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் அமெரிக்க மத்திய வங்கியானது அதன் வட்டி விகித அளவை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பினாலும் விலை சட்டென்று உயர்வதாக கூறப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பு என கருதுவதால் இந்த நிலை நிலவுதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் வாங்கி பல இடங்களில் வேலை செய்த வெளிநாட்டவர்.. அனுமதித்த முதலாளிகளுக்கு செக்