சிங்கப்பூர் இன மற்றும் சமய நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்மாதிரியாக திகழும் நாடு!

Photo: Slippery Rock University

உலகிலேயே அதிக சமய சமூகம் கலந்து வாழும் நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கிறது என்று சமூகங்கள் பற்றிய உரையாடல் ஒன்றில் அமைச்சர் மசகோஷ் ஷுல்கிஃப்லி கூறினார்.

மேலும் சிங்கப்பூர் இன மற்றும சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக திகழ முடியும் என்றும் சிங்கப்பூர் வசிக்கும் குடிமக்கள் அனைவரும் ஒரே மக்களாக ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஆதரவு அளித்துள்ளனர் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

தீபாவளி திருநாளையொட்டி வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருந்து!

பல வருடங்களாக சிங்கப்பூரில் இன மற்றும் சமய நல்லிணக்கம் இருந்து வருகிறது என்பதை முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஷ் ஷுல்கிஃப்லி அவர்கள் எடுத்துரைத்தார்.

இருப்பினும் அதனைக் கருத்தில் கொள்ளாமல் மேன்மேலும் இன மற்றும் சமய நல்லிணக்கத்தைப் பராமரித்து வளமாக்க அனைத்து சமூகத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் தாெடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

பிற மதச்சார்பற்ற நாடுகளில் வாழும் பன்மயச் சமூகத்தினர் இருக்கும் பகுதியில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சி மற்றும் திறந்த மனப்பான்மை வாழ்வுமுறை பற்றியும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இதுபோன்ற சமூகத்தினரின் வாழ்க்கை முறை அனுபவங்கள், பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழக்கூடிய பகுதியின் வாழ்க்கை முறை அனுபவத்திலிருந்து முழுமையாக வேறுபட்டு இருக்கும் என்றும் தெரிவித்தார்.

சிங்கப்பூர் இஸ்லாமியர்களைப் போன்றே இத்தகைய இஸ்லாமிய சிறுபான்மைச் சமூகத்தினர், தங்களுடைய சமயத்தைப் பின்பற்றுவதுடன், நாடு சார்ந்த பல இன்னல்களான விஷயங்களுக்கும் தொண்டு செய்யும் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் சிங்கப்பூரில் நிலையான அமைதி நிலவி வருவதற்கு காரணமாக இருக்கும் 3 வித தூண்களை பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

இந்த 3 தூண்களில் முதலாவது நீதி சமத்துவம் என்றும், இரண்டாவது சுயசார்பு சிந்தனை என்றும், மூன்றாது மற்றும் முதன்மையானது பிணைப்புமிக்க நல்லிணக்கமிக்க சமூகமாக இருப்பது என்றும் அமைச்சர் பெருமிதத்துடன் கூறினார்.

சிங்கப்பூரில் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு