5.45 மில்லியனாகக் குறைந்த சிங்கப்பூர் மக்கள்தொகை!

Pic: Nuria Ling/TODAY

நடப்பாண்டு ஜூன் மாதம் நிலவரப்படி, சிங்கப்பூர் மக்கள்தொகை 5.45 மில்லியனாகக் குறைந்துவிட்டது. கடந்த 2020- ஆம் ஆண்டு சிங்கப்பூர் மக்கள்தொகை 5.69 மில்லியனாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, மக்கள்தொகையில் நடப்பாண்டு 4.1% குறைந்துவிட்டது.

மக்கள்தொகைக் குறைந்திருப்பது இது மூன்றாவது முறை ஆகும். இதற்கு முன் 1986- ஆம் ஆண்டு 0.1%- ம், 2020- ஆம் ஆண்டு 0.3%- ம் மக்கள்தொகை சரிவுக் கண்டிருந்தது. சிங்கப்பூரர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாகியிருக்கிறது. மொத்தப் பிறப்பு விகிதம், இதுவரை இல்லாத அளவில் மிகக் குறைவாக, 1.1% ஆக பதிவானது. மக்கள்தொகை குறைவுக்கு இது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூருக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே விமான சேவை எப்போது தொடங்கும்?- அறிவிப்பை வெளியிட்டது ‘Jetstar Asia’!

அதேபோல், கொரோனா பரவல் காரணமாக, அமல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளே மக்கள்தொகை குறைந்ததற்கு மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது. கட்டுமானம், கப்பல்- பட்டறை போன்ற துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை சரிந்ததும் காரணம்.

சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள்தொகையில் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 0.7% குறைந்து 3.5 மில்லியனாக உள்ளது. நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 6.2% குறைந்து 0.49 மில்லியனாக உள்ளது. மேலும், வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் தொழிலாளர்கள்- 20%, இல்லப் பணிப்பெண்கள்- 16%, எம்பிளாய்மெண்ட் பாஸ்- 11%, எஸ் பாஸ்- 11% ஆக உள்ளது.

இந்தோனேசியாவிற்கு ‘AstraZeneca’ கொரோனா தடுப்பூசி மருந்தை அனுப்பிய சிங்கப்பூர்!

புதிதாக 21,085 பேருக்கு குடியுரிமையும், 27,470 பேருக்கு நிரந்தரமாக வசிக்கும் தகுதியும் வழங்கப்பட்டன. ஆனால், இந்த எண்ணிக்கை கடந்த 2020- ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை, 1970- ஆம் ஆண்டுக்கு பிறகு குறைந்திருப்பது இதுவே முதல் முறை.

இருப்பினும், கொரோனா கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளில் இருக்கும் சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் சிங்கப்பூர் உள்ளூர்வாசி மக்கள்தொகையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.