சிங்கப்பூரில் தொற்று பரவல் குறைந்தும் போதிய ஓய்வில்லாமல் உழைக்கும் மருத்துவர்கள்..!

Pic: SingHealth

சிங்கப்பூரில் அண்மை காலமாக தினசரி COVID-19 தொற்று சம்பவங்கள் குறைந்து வந்தாலும், பொது மற்றும் பலதுறை மருந்தகங்களும், தனியார் மருத்துவர்களும் இன்னமும் போதிய ஓய்வு இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் மன உளைச்சல் நீடிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து COVID-19 அமைச்சுகள் நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுகாதார அமைச்சர் திரு. ஓங், தீவிர சிகிச்சைப் பிரிவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து சமாளிக்கக்கூடிய நிலையில் உள்ளதாகவும், வழக்கமான வார்டுகளில், குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் இன்னமும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது என்றார்.

வெளிநாட்டவர்களால் சீரழிக்கப்பட்ட பெண்… ஓடி உதவிய வெளிநாட்டு ஊழியர்.. இருவர் இடையே நடந்த உரையாடல் – முழு தொகுப்பு

சிங்கப்பூரில் கடந்த 2 வாரங்களில், தொற்று சம்பவங்கள் குறைவாக பதிவானது. அதற்கேற்ப அவசர சிகிச்சை பிரிவை நாடும் மக்களின் எண்ணிக்கையும் சற்று குறைந்தது. அரசு மருத்துவமனைகளில் 3,000 பேர் என்ற நிலையில் இருந்த எண்ணிக்கை 2,800ஆக குறைந்தது.

இருப்பினும் இந்த எண்ணிக்கை கூடுதலான அளவுதான் என்றும், மருத்துவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் நோயாளிகளில் சிலர் அரசு மருத்துவமனைகளில் இருந்து தனியார் மருத்துவமனைகள் போன்ற இதர பராமரிப்பு இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் திரு. ஓங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் கனிவான கவனத்திற்கு…இனிமேல் இந்த நடைமுறை இல்லை.!