டாக்சி, வாடகை கார் ஓட்டுநர்களுக்கு என்னென்ன உதவிகள் வழங்கப்படுகிறது.? – அமைச்சர் விளக்கம்.!

Singapore help taxi drivers
Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் முன்னிலை ஊழியர்களை ஏற்றிச்செல்லும் டாக்சி, வாடகை கார் ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு எந்த வகையிலான உதவிகள் கிடைக்கும் என நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டதற்க்கு போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் எழுத்து மூலம் பதிலளித்தார்.

COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் அல்லது தனிமைப்படுத்தப்படும் டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான திறன் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்ற தமிழக ஊழியர்!

இதுகுறித்து அவர் கூறுகையில், டாக்சி, வாடகைக் கார் ஓட்டுநர்கள் முக்கிய ஊழியர்களையும், சிங்கப்பூரர்களையும் அன்றாடம் ஏற்றிச் செல்பவர்கள் என்பதால், அவர்களுக்கு COVID-19 தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக கூறினார்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வாடகையில் கூடுதல் கழிவு மற்றும் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும், கொரோனா பரவல் அதிகமுள்ள சூழல்களில் பணியாற்றி, கிருமித்தொற்று ஏற்பட்டவர்களுக்கு 3,000 வெள்ளி உதவித்தொகை ஒருமுறை அளிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தனிமைப்படுத்தப்படுவோருக்கான உதவித்திட்டத்தின் கீழ், ஓட்டுநர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 வெள்ளி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.

ஓட்டுநர்களுக்கான நிவாரண நிதி திட்டத்தின் (COVID-19 Driver Relief Fund) கீழ், அரசாங்கத்தின் வழங்குதொகையும் அவர்களுக்கு அளிக்கப்படுவதாக அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு இதுதான் ஒரே வழி; நிதியமைச்சர் திரு வோங்.!